" இங்கிலீஷ் கிராமர் புரியவில்லை ??! "
" இங்கிலீஷ் பேசனும்னா கான்வென்ட் ஸ்கூல்ல படிச்சிருக்கனும் !! "
" இங்கிலீஷ் பேசனும்னு ஆசையாத்தான் இருக்கு.கிராமர்னு வரும்போது குழப்பமயிருது !!!"
இதுபோல எத்தனையோ சிந்தனை நம்முள்.ஆனால்படித்துவிட்டு வேலை வாய்ப்புகளைதேடி வரும்போது ஆங்கிலம் இன்றி எதுவும் செய்யமுடிவதில்லை .
நல்ல திறமை இருந்தும் பயனற்று போய்விடுகிறது.
"கேள்விகளே வெற்றியின் திறவுகோல்"
ஒரு மொழியை எப்படி கற்றுக்கொள்வது ?
இலக்கணம் என்றால் என்ன?. இலக்கணம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் ?. இதுபோன்ற கேள்விகளுடன் பயணிப்போம்.
தமிழர்களாகிய நாம் எல்ல மொழிகளையும் கற்றுகொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் .ஏனெனில் நமது மொழியில் இலக்கண வலிமை அதிகம் .
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில் (திருக்குறள் :472 )
(ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலை பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாது ஏதுமில்லை )
இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு நெறி அல்லது வரையரை . ஆகையால், ஆங்கிலம் பிழையின்றி பேசவும் எழுதவும் ஆங்கில இலக்கணம் அவசியம் உள்ளது. தமிழில் சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்குவகைப்படுவது போல ஆங்கிலத்தில் அது எட்டு வகைப்படுகிறது. அவை, பெயர்ச்சொல்(1.Noun, 2.Pronoun), வினைச்சொல்(3.Verb), உரிச்சொல்(4.Adjective, 5.Adverb), இடைச்சொல்(6.Preposition, 7.Conjunction, 8.Interjection). இதனை Parts of speech (சொற்களின் வகை) என்பர்.
"
ஆங்கில இலகணம் மிகவும் எளிமையானது.
PRONOUN : பிரதி பெயர்ச்சொல்
A word that is used instead of a noun or noun phrase
They have three persons,
1. First person தன்னிலை
2. Second Person முன்னிலை
3. Third person படர்கை
1. FIRST PERSON:
| Frist Person | Tamil Meaning |
|---|---|
| I | நான் |
| Me | என்னை |
| MY | என்னுடைய |
| Mine | என்னுடையது |
| We | நாம் |
| Us | நம்மை |
| Our | நம்முடைய |
| Ours | நம்முடையது |
2.SECOND PERSON:
| Second Person | Tamil Meaning |
|---|---|
| You | நீ நீங்கள் |
| You | உன்னை, உங்களை |
| Your | உன்னுடைய, உங்களுடைய |
| Yours | உன்னுடையது , உங்களுடையது |
| Subject | Object | Possessive Adjectives | Possessive Pronouns |
|---|---|---|---|
I | Me | My | Mine |
We | Us | Our | Ours |
You | You | Your | Yours |
They | Them | Their | Theirs |
He | Him | His | His |
She | Her | Her | Her's |
It | It | It's |
ஆங்கில இலக்கணத்தில் மிகவும் முக்கியமான பகுதி பிரதி பெயர்சொல் ஆகும்.
No comments:
Post a Comment